கதிரவனிலிருந்து நெருப்புக்கோளமாகப் பிரிந்து வந்த இந்த உலகப் பந்தின் மேற்பரப்பில். முதலில் சூடு தணிந்து உயிர்கள் தோன்றத் தொடங்கிய இடம் குமரிக்கண்டம் (Lemuria) என்ற தமிழ் நிலப்பரப்பு என்பது ஆராய்ச்சி முடிபு.
மேலும் படிக்க
Thursday, June 26, 2008
தமிழினம் மேற்கொள்ள வேண்டிய ஆக்க வினைகள்
இந்திய நாட்டின் இன்றையக் கல்வி வெறும் போலியாக இருக்கின்றது. இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து உண்மையான வாழ்க்கையிலிருந்து அவர்களை முடக்கி வைத்திருக்கின்றது. இளைஞர்கள் வெறும் பொருளீட்டும் எந்திரங்களாக மட்டுமே உருவாக்கப்படுகின்றனர். மக்கட்குப் பயன்படும் ஆக்க வழி எதுவும் அவர்கட்குக் கற்றுக் கொடுக்கப்படவில்லை.
தமிழ் இளைஞர் தமிழ் இளைஞராக இல்லை. தமிழர் என்ற அடையாளத்தையே அவர்கள் இழந்துபோய் விட்டனர். தங்கள் சொந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் முற்றும் அயலாராகவே அவர்கள் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் பல்லாண்டுகளாக அவர்கள் பயின்று வந்த ஆங்கிலவழிக் கல்வியே. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உரிய முதன்மையும் மதிப்பும் வழங்காத கல்வியாக அது இருந்தது. இன்றும் அவ்வாறே இருந்துவருகின்றது. இந்தியாவில் ஆங்கிலேயனின் ஆட்சி எந்திரத்தை நடத்திச் செல்லத் தேவையான அதிகாரிகள் அலுவலர்கள், ஊழியர்கள் உருவாக்குவதற்கென்றே மெக்காலே என்ற ஆங்கிலேயன் கொண்டுவந்த கல்வித்திட்டம் புகுத்திய கல்வி அது. ஆகையால் அலுவல் பார்ப்பதையே நோக்கமாகக் கொண்டு இளைஞர் அதைப் பயின்றனர். கல்வி தன் உயர்ந்த நோக்கங்களை இழந்து வெறும் வயிற்றுப் பிழைப்புக் கல்வியாக மாறியது. மேலும் படிக்க

தொல்காப்பியர் காலத்தின் மேல்வரம்பும் கீழ்வரம்பும்
உலக மொழிகளில் உள்ள இலக்கணங்களில் காலத்தால் மூத்ததாக அமைந்த தொல்காப்பியம் தமிழுக்குத் தனிச்சிறப்புச் சேர்த்துள்ளது. இதன் காலத்தை வரையறை செய்யவேண்டும் என்னும் கருத்துத் தமிழறிஞர் களிடையில் முகிழ்த்துள்ளது. பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் இம்முயற்சியை முடுக்கி விட்டிருப்பது வரவேற்கத் தக்கது. தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தின் மேல்வரம்பும், கீழ்வரம்பும் வரையறுக்க அகச் சான்றுகளான தொல்காப்பிய நூற்பாக்களைத் துணைகொள்வது நம்பத்தகுந்த அணுகுமுறை. இதனைத் தமிழ் மூதறிஞர்கள் அனைவரும் ஒருமனமாக ஒப்புவர் எனக் கருதுகிறேன்.
மேலும் படிக்க
மேலும் படிக்க
சொந்தமாக எந்தக் கல்விக் கொள்கையும் இல்லாத புதுவை அரசே! உனக்குக் கல்வி வாரியம் ஒருகேடா?
புதுச்சேரி அரசுக்கென்று தனிக் கல்வித்துறை உண்டு; ஆனால் தனிக் கல்விக்கொள்கை இல்லை. தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையையே பின்பற்றி நடக்கிறது. தமிழ்நாட்டுப் பாடத்திட்டம், தமிழ் நாட்டுப் பாடநூல்கள், தமிழ்நாட்டுக் கல்வி வாரியம் நடத்தும் தேர்வுகள், தமிழ்நாட்டரசு தரும் சான்றிதழ்கள் இப்படி எல்லாவற்றிலும் தமிழ் நாட்டின் முன்றானையைப் பிடித்துக்கொண்டே நடந்துசென்று கொண்டிருக்கின்றது. மேலும் படிக்க
Subscribe to:
Posts (Atom)