தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள் தமிழே பாடச் செய்யுங்கள் அதற்காகத் திரண்டெழுங்கள்! இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை எனஉரைத்தால் அறையுங்கள்! (எது இசை?) என்று பாடினார் பாவேந்தர்.
விலையில்லாப் பெருமைபல உடையதேனும் விளங்காத மொழியினிலே பாட்டைக்கேட்டுத் தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும் தனக்கதுவோர் கலையின்பம் தருவதுண்டோ?
என்று பாடினார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. என்றாலும் இன்றுவரையில் தெலுங்கில் பாடும் வழக்கமே இருந்துவருகிறது.
வரலாற்றுக் கெட்டாத தொன்மைக்காலத்தில் தோன்றி வளர்ந்துவந்த தமிழிசைக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடநாட்டுச் சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரம் தான் இலக்கணநூல் என்றும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தியாகராசர் (1767-1847), சியாமா சாத்திரி (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776 - 1835) ஆகியோர்தாம் முதன்முதல் கர்நாடக சங்கீதம் பாடிய சங்கீத மும்மூர்த்திகள் என்றும் சிலர் அறியாமையாலோ, வேண்டுமென்றோ கூறிவருகின்றனர். இவர்களுக்கு முன்பு 4ஆம் நூற்றாண்டுகளில் பண்ணிசை பாடிய காரைக்காலம்மையார், 7, 8ஆம் நூற்றாண்டுகளில் தமிழிசை பாடிய முத்துத்தாண்டவர் (1560-1640), மாரிமுத்தா பிள்ளை (1712 -1787), அருணாசலக் கவிராயர் (1711-1779) ஆகியோரை அறிந்தவர்களும் மறைக்கின்றனர். சில இனத்தார் இசைக்கலைக்குத் தாமே உரியவர்கள் என்று சொந்தங் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க
Thursday, October 2, 2008
மக்கள் தொண்டர்கள் ஆட்சியைக் கைப்பற்றுக - ம. இலெ.தங்கப்பா
இந்த நாட்டில் பெரும்பாலான அரசியல் வாணர்கள் நேர்மையாளர்கள் அல்லர். தொண்டு நோக்கத்தோடு அரசியலுக்கு வந்தவர்களும் அல்லர். எந்த ஒழுங்கு முறையும் இல்லாத இந்தச் செயற்கை நாட்டில் அரசியல் என்பது நேர்மையில்லா வழிகளில் பொருள் ஈட்டுவதற்கான ஒரு தொழில். தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையில் குற்றங்கள் செய்வதற்கான ஒரு வாய்ப்பு. அதிகாரத்தினால் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையம் பயன்படுத்தி எல்லாவகை இன்பங்களையம் நுகர்வதற்கான வேட்டைக்காடு. அதிகார வலிமையால் பிறரை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது குதிரை ஏறும் ஒரு மகிழ்ச்சி விளையாட்டு.
அரசியலுக்கு வருபவர்களுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை. புறத்தகுதியும் தேவையில்லை அகத்தகுதியும் தேவையில்லை. எந்தக் காட்டானும் வரலாம். எந்தக் கழுதையும் வரலாம்.
வலிமையும் செல்வாக்கு மிருந்தால் அடாவடித் தனமும் எத்துவேலையும் தெரிந்தால் எவன் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் வெற்றி பெறலாம். ஆட்சியிடத்தில் அமர்ந்து கொள்ளலாம். நினைத்தபடி ஆட்டம் போடலாம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கலாம். சொந்த மண்ணையே விற்றுத்தின்னலாம். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்? பொருள் ஈட்டுதலே குறிக்கோள். அதற்கு என்ன தவறும் செய்யலாம். தண்டனை கிடையாது என்று ஆகிவிடும்பொழுது யார்தான் என்னதான் செய்ய மாட்டார்கள்?

Saturday, August 30, 2008
பேருந்துகளை உடைப்பதுதான் செம்மொழிக்கான போராட்டமா?
ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அந்த மொழிக்காரர்கள் அண்டை மாநிலத்தாருக்குத் தண்ணீர் தராமல் தடை செய்கிறார்களா? கடைகளை அடைத்துக்கலகம் செய்கிறார்களா? தங்கள் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையரை அடித்து உதைக்கும் பழக்கம் உள்ளவர்களா? எத்தனைப் பேருந்துகளை உடைத்திருக்கிறார்கள்? எத்தனை முறைத் தொடர்வண்டி மறியல்கள் செய்திருக்கிறார்கள்? என்பனவெல்லாம் தகுதிகள் ஆகா.
செம்மொழிக்கான முதன்மைத் தகுதிகள் மூன்று. அவை 1. தொன்மை, 2. செம்மையான இலக்கிய இலக்கணவளம், 3. தாய்மை என்பன. தமிழ்மொழி கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த செவ்விலக்கியங்களிலிருந்து கி.மு. விலேயே திரட்டிய, இன்றைய மொழியியலாரும் வியக்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை உடைமை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட உலகப் பேரறிஞர்கள் வியக்கும் செவ்வியலக்கியங்களை உடைமை, 153 திராவிடக் குடும்ப மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மை ஆகியவற்றைத் தன்னேரிலாத் தகுதிகாளகப் பெற்றது தமிழ்மொழி.

விழுங்கவரும் இனக் கடல்கோள் - பேரா.ம.இலெ.தங்கப்பா
உலகம் முழுவதிலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வேறுபல நாடுகட்குச் சென்று அலுவல் பார்ப்பது, வாழ்வது என்பது காலத்தின் கோலமாகிவிட்டது. குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஐரோப்பிய நாடுகட்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகுதியாகிக் கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கீழை நாட்டு மக்களின் உள்வரவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டு வருகின்றன. கடவுச் சீட்டு, நுழைவுச் சீட்டுப் போன்றவற்றின் கட்டுப்பாட்டோடு, குடிபெயர்வு தொடர்பான அவர்களின் சட்டங்களும் விதிமுறைகளும் வேறின மக்கள் தங்கள் நாடுகளில் அளவுக்கு மீறிக் குடியேறிவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன.
அந்தந்த நாட்டில் அந்தந்த மொழியே ஆள்கின்றது. அதைக் கற்றுக் கொள்ளாதவர்கள் அங்கே சென்று வாழமுடியாது; அலுவல் பார்க்கமுடியாது. மேலும் ஒரு நாட்டினுள் வெளிநாட்டினர் நுழைந்து நிலம், சொத்து வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உள்ளன. அந்தந்த நாடு அந்தந்த நாட்டு மக்கட்கு உரிமையா யிருப்பதில் எந்தக் குற்றமும் இல்லையே.

தமிழிசை - அன்றும் இன்றும் - 3
கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரையில் மிகச்சிறந்த நிலையிலிருந்த தமிழிசை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையயடுப்பாலும், களப்பிரர், பல்லவர், முகலாயர், தெலுங்கர், மராட்டியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலியோரின் அரசியற் படையெடுப்பாலும் அவர்களின் ஆட்சியினாலும், போற்றுவாரற்றுப் பொலிவிழந்து போயிற்று. வடநாட்டினரின் வல்லாண்மையால், மறைக்காடு, குடமூக்கு என்ற ஊர்ப்பெயர்கள் யாவும் வேதாரண்யம், கும்பகோணம் என வடமொழிமயமாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம்.
மேலும் படிக்க
மேலும் படிக்க
Monday, July 28, 2008
தமிழிசை - அன்றும் இன்றும் - முனைவர் இரா. திருமுருகன்
2. ஒரே ஒத்தில் இசைத்தல் :தமிழிசையில் ஓர் இசை நிகழ்ச்சியின் தொடக்க முதல் முடிவு வரையில் ஓரே அடிமணை (ஆதார சுருதி) யில் நின்று இசைப்பார்கள். அந்த அடிமணை நரம்பு 'ஒத்து' எனப்படும். ச என்னும் குரல் நரம்பு அடிமணையாகக் கொள்ளப்படும். ஒரே நிலையில் நின்று இசைப்பதால் அதனைக் கேட்போர் மனம் ஒருநிலைப்படுகிறது. அதனால் ஒத்தினை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வழக்கம் தமிழி சையில் இல்லை. ஆனால் மேனாட்டிசையில் ஒரு நிகழ்ச்சியில் பலமுறை ஒத்தினை மாற்றிக் கொள்வது இயல்பாக உள்ளது.
3. நுண்ணலகு முறை :தென்னக இசையில் 22 அலகு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றின் மேலும் சில நுண்ணலகுகள் உண்டு. இம்முறைதான் தமிழிசையில் பண்கள் நுட்பமாக வேறுபட்ட நிறங்களைப் படைத்து வேறுபட்ட உணர்வுகளை உண்டாக்க உறுதுணையாக உள்ளது. ஆனால் மேனாட்டிசையில் 12 நரம்பிடங்கள் (சுரத்தானங்கள்) மட்டுமே கொள்ளப்படுகின்றன. மேலும் படிக்க

விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடு
இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமத்துக்கு எதிரான முதல் பேராகும்.
பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்செப்பேடு 27 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அச்செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு நடுவ ஆய்வாளர் புலவர் இராசு ஆய்வுசெய்து பின்வரும் செய்திகளைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர் பூலித்தேவன் என அழைக்கப்பட்டதென்றும். அவர் முழுப்பெயர் காத்தப்ப பூலித்தேவன் என்றும் ஆய்வாளர் ந. இராசையா கூறியுள்ளார். 1748ஆம் ஆண்டு இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது. நெற்கட்டுச் செவ்வலில் கோட்டை கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் பூலித்தேவன். நெற்கட்டுச் செவ்வலில் இராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது. அதைச் சரி செய்யப் பூலித்தேவன் கேட்டுக் கொண்டதனால் நெற்கட்டுச் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர் தன் செலவில் இராமகோவிந்தபேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார். அதற்குப் பதிலாக விபவ ஆண்டு ஆடி மாதம் 25ஆம் நாள் பூலித்தேவன் பிறக்குடையாக் குடும்பனுக்கு மானியபூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.
குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயில் இருந்து குளம் பேணிக்காப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றிற்குக் கணக்கெழுதி ஒப்புவிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டுள்ளன. 85,86,87,88 ஆம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாக இருக்கும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித்தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் போரை முதலில் தொடங்கிய பூலித்தேவனைப் பற்றி அரிய செய்திகளைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முதன்மை வாய்ந்தது என்று புலவர் செ. இராசு கூறுகிறார்.- நன்றி. தமிழோசை, 6-7-௨00௮
http://www.thelithamizh.com

Subscribe to:
Posts (Atom)